திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி மாநாடு ஜாம்புரி என்ற பெயரில் கடந்த 28ம் தேதி துவங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில் 4 வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் 20 மாநிலங்களை சேர்ந்த சாரண சாரணியர் மற்றும் ஆசிரியர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதன் நிறைவு விழா இன்று (2ம்தேதி) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
The post சாரண, சாரணியர் இயக்க வைரவிழா முதல்வர் இன்று பங்கேற்பு appeared first on Dinakaran.