*நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்
தஞ்சாவூர் : தஞ்சாவூரை அடுத்த விளார் பகுதியில் சாலையில் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் பன்றிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.தஞ்சை அடுத்த விளார் பகுதியில் அப்பகுதி மக்கள் சாலையின் ஓரங்களிலே குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள், அங்கு கடைகள் வைத்து நடத்துபவர்கள் அவர்களி டம் சேரும் குப்பைகள் அனைத்தையும் சாலையின் ஓரங்களில் அதிக அளவில் கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் பன்றிகள் கூட்டம் அதிகளவில் சுற்றி தெரிகிறது. இவை சாக்கடைக்குள் உருண்டு புரண்டு எழுந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்துவிடுகின்றன.
இதனால் குடியிருப்புவாசிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையின் குறுக்கே அங்கும், இங்கும் ஓடித்திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. பொதுமக்கள் சென்று பன்றிகளை விரட்டினால் பன்றிகள் பொதுமக்களை விரட்டுவதாக கூறப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதியில் குப்பை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் பன்றி தொல்லையால் அவதி appeared first on Dinakaran.