சென்னை: சாலையோரம் வசிக்கும் வீடற்றோருக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் வீடற்றோர் குறித்து கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளது. சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் வீடற்றோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கழிவறை, குளியலறை வசதி, மின்சார வசதி உள்ளிட்டபோதிய அடிப்படை சுகாதார வசதிகள் இன்றியும், தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியாமலும் வாழ்ந்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் சாலையோரங்களில் படுத்து உறங்கும்போது, இவர்கள் மீது வாகனங்கள் மோதி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அவர்களிடம் சேமிப்பு பழக்கமும் பெரியதாக இல்லை.