சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 3-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதூர். இம்பேக்ட் வீரராக இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசிய அவர் யார் என்று பார்ப்போம்.
23 வயதான விக்னேஷ் புதூர், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர். இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர். அவரை இந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்தது 5 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி.