சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 28ம் தேதி நடைபெற்ற சிஎஸ்கே – ஆர்சிபி அணிகளுக்கிடையேயான போட்டியில் ரசிகர்களிடம் செல்போன்கள் திருடப்பட்டதாக ஜார்கண்ட் மாநிலத்தை ராஜ்குமார் நுனியா, விஷால் குமார், கோபிந்து குமார், ஆகாஷ் மற்றும் சிறுவர்கள் என மொத்தம் 8 நபர்களை திருவல்லிக்கேணி கைது செய்துள்ளனர்.
செல்போன் திருடர்கள் ஜார்கண்டிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு வந்து அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் கடந்த 28ம் தேதி சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் வாங்கி மைதானத்திற்குள் சென்று, போட்டியின்போது ஆர்பரிப்பில் ஈடுபட்ட ரசிகர்களை குறி வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
36 செல்போன்களை பறித்துவிட்டு மீண்டும் ரயில் மூலமாக வேலூருக்கு சென்று அங்கிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தப்பிக்க முயன்ற போது அவர்களை வழிமறித்து திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர். செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சிஎஸ்கே – ஆர்சிபி போட்டியின் போது ரசிகர்களின் செல்போன்களை திருடிய ஜார்க்கண்ட் கொள்ளை கும்பல் கைது appeared first on Dinakaran.