சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் 23-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த சீசனில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பஸ்களில் கட்டணம் ஏதும் செலுத்தாமல் பயணிக்கலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. போட்டி முடிந்து ரசிகர்கள் பாதுகாப்பாக செல்வதற்காக கூடுதலாக 90 நிமிடங்களுக்கு மெட்ரோ சேவைகள் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.