சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று (ஏப்ரல் 2) தொடங்கவுள்ளது.
சிஎஸ்கே, டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம், வரும் 5-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (ஏப்ரல் 2) தொடங்குகிறது. இன்று காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட்டை ரசிகர்கள் வாங்கிக் கொள்ளலாம். டிக்கெட்களை chennaisuperkings.com, district.in ஆகிய இணையதளங்களில் பெறலாம்.