சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று இணையதளம் வாயிலாக நடைபெற்றது. டிக்கெட்டின் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.