குவஹாட்டியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பேட்டிங்கின் போது தோனி மிகவும் தாமதமாக களமிறங்குவது ஏன் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்விகளுக்கு பயிற்சியாளர் பிளமிங் பதிலளித்துள்ளார்.