ஐபிஎல் டி20 சீசன் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் போதெல்லாம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டி, கவனத்தை ஈர்க்கும் போட்டி எது என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிதான். இரு அணிகளும் களத்தில் மோதினாலே அது ஒரு பண்டிகைக்கான கொண்டாட்டத்துக்கு குறைவில்லாததாகவே ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள்.