திமுக சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி 87வது வட்ட கழக திமுக சார்பில் ‘ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை’ விளக்க பொதுகூட்டம் அம்பத்தூர் பாடி யாதவ தெருவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, திமுக பொருளாளர் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை விளக்கினர்.
கூட்டத்தில் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், திமுக ஆட்சியை எதிர்ப்பவர்கள் கூட வாழ்த்தும் படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் போது, 30 ஆண்டுகள் பின்தங்கி இருந்த தமிழகத்தை, வளர்ந்த நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் போல தமிழகத்தின் பொருளாதாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்த்துவார் என்று கூறினார்.
முன்னதாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, தற்போதைய திமுக ஆட்சியில் 25 மாவட்டங்களில் புதிய புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரபட்டன. அம்பத்தூர் தொகுதி 2011 -ல் புதிய பெயருடன் உருவாக்கப்பட்டது. 10 வருடமாக நீங்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை.
‘ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை’ விளக்க பொதுகூட்டம்
ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும் என்கிற காரணத்திற்காக எங்களுக்கு வாக்களித்து, ஜோசப் சாமுவேல் அவர்களை எம்.எல்.ஏ. வாக அமர வைத்துள்ளீர்கள் அதற்கும் நான் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன் என்று கூறி, திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை பட்டியலிட்டுப் பேசினார்.