சத்யராஜ், ஜெய், பிரக்யா, யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள காமெடி படம், ‘பேபி & பேபி’. பிரதாப் இயக்கியுள்ள இந்தப் படத்தை, யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் பி.யுவராஜ் தயாரித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நடிகர் யோகிபாபு பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநர் பிரதாப், 17 வருட நண்பர். ஒரு படத்தில் இருவரும் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளோம். இன்று அவர் இயக்குநர், நான் காமெடி நடிகன். நாம் உண்மையாக உழைத்தால் நமக்கானது, தானாக வந்து சேரும். இந்தப்படம் மிக நல்ல அனுபவம். சத்யராஜ் சாருடன் எப்போதும் கவுண்டமணி சார் பற்றிப் பேசி சிரிப்போம்.