சிட்னி: சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை டிரா செய்வதில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (3-ம் தேதி) தொடங்குகிறது.