ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சிட்பண்ட் மோசடி வழக்கில் தனியார் சொகுசு விமானம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹைதராபாத்தை சேர்ந்த ஃபால்கன் குரூப் என்ற நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டியது. இதில் ரூ.850 கோடி வரை மோசடி செய்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.