சித்தார்த் நடிக்கும் 40-வது திரைப்படத்துக்கு '3 BHK' என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
இந்தப் படத்தை '8 தோட்டாக்கள்' மற்றும் 'குருதி ஆட்டம்' ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார். சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' படத்தை தயாரித்த ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அமீர் ராம்நாத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத், சைத்ரா ஆசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.