இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, நதியில் இந்தியா ஏதாவது புதிய கட்டமைப்பை உருவாக்கினால், அதனைத் தாக்குவோம்” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் எச்சரித்துள்ளார்.
ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு அமைச்சர் கவாஜா அசிஃப் அளித்த பேட்டியில், "சிந்து நதியில் புதிதாக எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவது, இந்தியாவின் ஆக்கிரமிப்பாக பார்க்கப்படும். அவர்கள் சிந்து நதியில் ஏதாவது கட்டமைப்பைக் கட்ட முயன்றால், அதனை நாங்கள் கட்டாயம் தாக்குவோம். ஆக்கிரமிப்பு என்பது பீரங்கியாலோ துப்பாக்கியாலோ சுடுவது மட்டுமில்லை; அதற்கு பல முகங்கள் உள்ளன. தண்ணீரைத் தடுத்து நிறுத்துவதோ, திசைத் திருப்பி விடுவதோ அதில் ஒன்று. இது தாகம், பட்டினி மரணங்களுக்கு வழிவகுக்கும்.