நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது, “நாங்கள் 'சேக்ரட் கேம்ஸ்' மற்றும் 'லஸ்ட் ஸ்டோரீஸ்' உள்ளிட்ட தொடர்களை நெட்ஃபிளிக்ஸுக்காக எடுக்கும்போது அதை ஒரு வாய்ப்பு என்று நினைத்தோம். அவர்களுடன் சேர்ந்து சில நல்ல படைப்புகளை உருவாக்கினோம். பின்னர், மெதுவாக, கோவிட் காலத்தில், எல்லாம் தலைகீழாக மாறியது.