எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடுக்கா’. இதில் விஜய் கவுரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா மற்றும் பலர் நடித்துள்ளனர். கெவின் டெகோஸ்டா இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு சதீஸ் குமார் துரைக்கண்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விஜய் கவுரி புரொடக்‌ஷன்ஸ், நியாந்த் மீடியா மலர் மாரி மூவிஸ் சார்பில் கவுரி சங்கர் ரவிச்சந்திரன், ஆனந்த் பொன்னுசாமி இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. அதில் இயக்குநர் பேரரசு பேசும் போது, “கடுக்கா என்றால் காய் இல்லை, நம்ப வைத்து ஏமாற்றுவது தான் கடுக்கா. படத்தில் இரண்டு ஹீரோ. அதில் யாருக்கு ஹீரோயின் கடுக்கா கொடுக்கிறார் என்பது தான் படம்.