செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்டு கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், பிரான்ஸின் மாக்சிம் வச்சியர் லாக்ரேவுடன் மோதினார். இந்த ஆட்டம் 56-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.
மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சாமுவேல் சேவியனுடன் மோதினார். இந்த ஆட்டம் 29-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.