சென்னை: “சென்னை வேளச்சேரியில் மூன்று மொழிகளை கற்பிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் தனியார் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் திருமாவளவன் தான்" என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் தனியார் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் திருமாவளவன் தான்.