மும்பை: நடப்பு ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் சியர் லீடர்ஸ் மற்றும் டிஜே போன்ற கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அதை பிசிசிஐ பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது நடப்பு சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள். இந்நிலையில், போர் நிறுத்த அறிவிப்பின் எதிரொலியாக, வரும் சனிக்கிழமை (மே 17) முதல் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்காக 10 அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன.