நடந்து முடிந்த ஆண்டர்சன் – டெண்டுல்கர் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கோப்பையை இங்கிலாந்துக் கைப்பற்ற விடாமல் இந்திய அணி ஓவலில் காவிய வெற்றி பெற்று தொடரை 2-2 சமன் செய்துள்ளது. இந்தத் தொடரில் இந்திய வீரர்களின் தனிப்பட்ட திறன்களை சச்சின் டெண்டுல்கர் மதிப்பாய்வு செய்துள்ளார். இதில் முகமது சிராஜுக்கு அவருக்கேயுரிய பெருமைகள் கிடைப்பதில்லை என்று வருந்தியுள்ளார்.
இந்தத் தொடரில் 1113 பந்துகளை வீசியுள்ளார் சிராஜ், இவர்தான் அதிக ஓவர்களை வீசியவராவார். 23 விக்கெட்டுகளுடன் இரு அணிகளிலும் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மேட்ச் வின்னராகத் திகழ்கிறார் சிராஜ். பும்ரா இல்லாத 2 டெஸ்ட் போட்டிகளிலும் சிராஜ் அதியற்புதமாக வீசி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.