லண்டன்: இங்கிலாந்து அணி உடனான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் இந்தியாவின் சிராஜ். கடைசி டெஸ்ட் போட்டியை டிரா செய்து, தொடரை 2-2 என இந்தியா சமன் செய்துள்ளது.
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் ஆட்டத்தில் 35 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் சூழல் இருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 4 விக்கெட் தேவைப்பட்டது. மழை காரணமாக 4-ம் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்கள் முழுமையாக விளையாட முடியாமல் போனது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 76.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் ஜேமி ஸ்மித் மற்றும் ஜேமி ஒவ்ர்டன் இருந்தனர்.