பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் 2004 முதல் 2014 வரை பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் இறுதியாக ஜனவரி 3, 2014-ல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பிரதமராக பதவி வகித்தபோது சிறந்த தருணம் எது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மன்மோகன் கூறிய பதில்: இதைப்பற்றி சிந்திக்க எனக்கு நேரம் தேவைப்படும். ஆனால், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தின் செயல்முறைகளை தடுக்க முயன்ற அணுசக்தி ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை செய்து கொண்டதுதான் என்னைப் பொருத்தவரையில் சிறந்த தருணம். இது, பல வழிகளில் நமது நாட்டின் தொழில்நுட்பத்தை முன்னேற்றம் காணச் செய்யும்" என்றார்.