சென்னை: முதல்வரின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.15 கோடி மகளிர் பயன் பெற்றுள்ளதாகவும், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 14,45,109 வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்குப் பார்வையுடன் எண்ணற்ற திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார். முதல்வரின் தனித்தன்மை வாய்ந்த இத்திட்டங்கள், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சுகாதாரம், ஊரகம், நகர்ப்புர வளர்ச்சி, சமூக நீதி ஆகிய 7 முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.