நீர்நிலைகளில் பல்லுயிர் பெருக்கத்துக்கு ஆதாரமான சிறவித் திட்டுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.
பொதுவாக நதிகள் இயற்கையாக உருவாகும் போது, நீரானது நதியின் மத்தியில் திட்டுகளை உருவாக்கி விடும். இந்த திட்டுகளை சுற்றி நீர் ஓடும். திட்டு ஒரு சிறுதீவு போல் இருக்கும். அதில் நாளடைவில் மரம் செடி, கொடிகள் வளர, அங்கு பல உயிரினங்கள் பறவைகள் தங்க ஆரம்பித்துவிடும். இத்திட்டுகளே பல்லுயிர் பெருக்கத்துக்கு உயிர் ஆதாரமாக இருக்கின்றன. குளம், குட்டை போன்ற நீராதாரங்களை வெட்டும்போது, அவற்றின் மத்தியில் உயரமான பல திட்டுகளை முன்னோர்கள் அமைத்துள்ளனர்.