சிறு தொழில்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தாழ்வழுத்த மின்இணைப்புகளில் உச்சநேர மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க டிஓடி மீட்டர் பொருத்தும்படி, பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மின்நுகர்வானது தினசரி காலை, மாலையில் சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட்டாகவும் மற்ற நேரங்களில் 15 ஆயிரம் மெகாவாட்டாகவும் உள்ளது. இதனால், தொழிற்சாலைகள் போன்றவற்றில் காலை, மாலையில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு ‘பீக் ஹவர் சார்ஜ்’ எனப்படும் உச்சநேர கட்டணம் வசூலிக்கப்படுகிறது.