பெங்களூரு: கர்நாடகாவில் அரசின் ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் அரசின் ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா மாநில சட்டப்பேரவையில் கடந்த மாதம் நிறைவேறியது. இதன் மூலம் மத சிறுபான்மையினருக்கு 2 பி பிரிவில் ரூ.2 கோடி வரையிலான ஒப்பந்தப் பணிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்ய‌ப்பட்டுள்ளது.