கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) விதிகள் சிறுபான்மை கல்லூரிகளுக்கு பொருந்தாது என உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், 66 உதவிப் பேராசிரியர்களின் நியமனங்களுக்கு 4 வார காலத்தில் ஒப்புதல் அளிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள 4 சிறுபான்மை கல்லூரிகளில் பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிகளுக்கு புறம்பாக தேர்வுக்குழு அமைக்காமல், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 66 உதவிப் பேராசிரியர்களின் நியமனங்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் ஒப்புதல் அளிக்க மறுத்தது. இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.