சென்னை: மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது மட்டும் இல்லாமல் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்த தம்பதியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னையில் சிறுமிகளின் ஆபாச பட வீடியோக்கள் ஆன்லைனில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக உயர் அதிகாரிகளுக்கு குழந்தைகள் நல அமைப்புகள் மூலம் தகவல் வந்தது. அதன்படி உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமிகள் வீடியோ விற்பனை தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அதில் ஆர்.ஏ.புரம் பகுதியில் ஒருவர் ஆன்லைன் மூலம் சிறுமிகளின் ஆபாசப்பட வீடியோக்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த நபரை பிடித்து அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது, அதில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், அப்போது அதை அவர்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோக்கள் அதிகளவில் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே போலீசார் அந்த நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியபோது, 10ம் வகுப்பு படித்து வரும் தனது மகளை தனது மனைவி உதவியுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், அதை வீடியோவாக எடுத்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுபோல் அப்பகுதியில் பல சிறுமிகளை வீடியோ எடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வீடியோ விற்பனை செய்த நபர் மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். கைது ெசய்யப்பட்ட நபரின் செல்போனில் உள்ள சிறுமிகளின் வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தம்பதியின் மகளுக்கு போலீசார் கவுன்சலிங் அளித்து வருகின்றனர்.
The post சிறுமிகள் ஆபாச வீடியோக்கள் ஆன்லைனில் விற்ற தம்பதி போக்சோ சட்டத்தில் கைது: மகளிர் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.