ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யப் படைகள்மீது பாலியல் வன்கொடுமை, மனித உரிமைமீறல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில், உக்ரைனின் மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற ஆணையர் லியுட்மிலா டெனிசோவா, “ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட புச்சா நகரில், 11 வயது சிறுவனை ரஷ்யப் படை வீரர்கள், அச்சிறுவனின் தாயை நாற்காலியில் கட்டிவைத்து அவர் கண்முன்னே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
உக்ரைன் – ரஷ்யா
உக்ரைன் – ரஷ்யா
மேலும் ரஷ்யாவின் ஐந்து ராணுவ வீரர்கள் கர்ப்பமாக இருந்த 14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தனியார் அமைப்பு ஏப்ரல் 8-ம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, ரஷ்ய வீரர்கள் 1,20,000-க்கும் மேற்பட்ட உக்ரேனியக் குழந்தைகளை ரஷ்ய எல்லை வழியாகக் கடத்தியதாகவும், கடத்தப்பட்ட குழந்தைகளில் பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது” எனக் குற்றம்சுமத்தியுள்ளார்.
உக்ரைனின் மற்றோர் அதிகாரி ஒலெக்சாண்டர் வில்குல் (Oleksandr Vilkul) இது தொடர்பாகக் கூறும்போது,” ரஷ்யப் படைகள் 16 வயது கர்ப்பிணியையும் 78 வயது மூதாட்டியையும் பாலியல் வன்கொடுமை செய்து, அதைக் காணொலியாகப் பதிவுசெய்து முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.
பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
இதைத் தொடர்ந்து, உக்ரைனில் ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, புதினின் ராணுவ வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, சமீபத்திய வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.