சென்னை: சிறைக்குள் செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் செல்வது குறித்து கண்டறிய சிறப்புக்குழு விசாரணை நடத்தும் என டிஜிபி தெரிவித்துள்ளார். உளவுப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அடங்கிய சிறப்புக்குழு விசாரணை நடத்தும். கடந்த வாரம் விசாரணையின் போது சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் செல்வது எப்படி என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் சிறப்புக்குழு விசாரணை நடத்தும் என டிஜிபி பதில் மனு அளித்துள்ளார்.
The post சிறைக்குள் செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் செல்வது குறித்து கண்டறிய சிறப்புக்குழு விசாரணை: டிஜிபி! appeared first on Dinakaran.