சென்னை: கைதிகளை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர வேண்டிய சிறைத் துறை அதிகாரிகளே குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேடு செய்த அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
புழல் சிறையில் தண்டனைக் கைதியாக உள்ள தனது கணவர் சிறையில் பார்த்த வேலைக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை எனக்கூறி புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.