சிவகங்கை: சிவகங்கையில் அரசு மதுக்கடையில் பாஜக பெண் நிர்வாகி தலைமையில் அக்கட்சியினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டி, மதுபான முறைகேட்டுக்கு தங்களது எதிர்ப்பை காட்டினர்.
சென்னையில் சில தினங்களுக்கு மதுபான முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். அப்போது, பாஜக போராட்டத்துக்கு போலீஸார் தொடர்ந்து அனுமதி வழங்க மறுப்பதாகவும், இதனால் இனி போலீஸார் அனுமதியின்றி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என அண்ணாமலை தெரிவித்தார்.