சிவகங்கை: சிவகங்கை அருகே பள்ளிச் சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்ட ஒரே ஊரைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். மானாமதுரை அருகே பள்ளிச் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் ஒரே ஊரைச் சேர்ந்த 7 பேர் நேற்று கைதாகினர். கைதானவர்களில் 6 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பள்ளியில் நடந்த குழந்தைகள் நலக்குழும முகாமில், சிறுமிகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறியதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி 7 பேரையும் கைது செய்தனர். சிறுமிகள் பள்ளிக்கு வரும் போது, வீடு திரும்பும் போது பல்வேறு வழிகளில் இவர்கள் பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
The post சிவகங்கை அருகே பள்ளிச் சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்: ஒரே ஊரைச் சேர்ந்த 7 பேர் கைது appeared first on Dinakaran.