சிவகங்கை: சிவகங்கையில் முதலமைச்சரின் கள ஆய்வுக்கு இடையே நடந்த நெகிழ்ச்சி சம்பவம் கல்லூரி மாணவிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. மாணவிகள் வாய்த்த கோரிக்கை உடனே நிறைவேறியதால் மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகங்கையில் இரண்டாவது நாளாக கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரைக்குடியிலிருந்து சிவகங்கை நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சோழபுரம் என்ற இடத்தில் நின்றிருந்த கல்லூரி மாணவிகளை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரிலிருந்து இரங்கி சென்று அவர்களை சந்தித்தார்.
இந்த நெகிழ்ச்சி விடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உசிரே நீதானே என்ற வரியுடன் ஹார்ட் சிம்பலையும் பதிவிட்டார். தமிழ்நாடு அரசின் புதுமை திட்டம் நாம் முதல்வன் திட்டம் போன்ற பல திட்டங்கள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதலமைச்சரிடம் மாணவிகள் மகிழ்ச்சி போங்க தெரிவித்தனர். அப்போது மாணவிகள் தங்களது கல்லூரிக்கு பேருந்து நிறுத்தம் இல்லை என்று முதலமைச்சரிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மாணவிகள் முதலமைச்சரிடம் வைத்த இந்த கோரிக்கை சில மணி நேரங்களிலேயே நிறைவேறியது. அந்த கல்லூரி அருகே உடனடியாக பேருந்து நிறுத்தம் வைத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் கல்லூரியின் அருகில் நின்று பேருந்துகள் செல்லும்படி ஓட்டுனர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதே போல் ஒக்கூறில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்திற்கு திடீரென்று சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற துறைசார்ந்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
The post சிவகங்கை கள ஆய்வுக்கு இடையே நெகிழ்ச்சி சம்பவம்: முதலமைச்சரை சூழ்ந்து கொண்டு பாராட்டிய கல்லூரி மாணவிகள் appeared first on Dinakaran.