சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, அம்பேத்கர் நகரில் வசித்து வரும் ஒரு தம்பதியின் மூத்த மகன் ஆதீஸ்வரன். இவர் திருப்பாச்சேத்தி அரசு உயர்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, மாணவன் ஆதீஸ்வரனை நேற்று 4 பேர் கட்டு பகுதிக்குள் தூக்கி சென்றதாகவும், அங்கு அவரை அடித்து துன்புறுத்தியதாகவும் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அடித்து துன்புறுத்தியதால் தான் அவமானம் தங்க முடியாமல் ஆதீஸ்வரன் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில், ஆதீஸ்வரனை அடித்து துன்புறுத்தியவர்களை உடனடியாக கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்து திருப்புவனம் அரசு மருத்துவமனை எதிரே மதுரை – ராமேஸ்வரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சுமார் அரைமணிநேரமாக போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், ஆதீஸ்வரனை அடித்து துன்புறுத்தியதாக கூறப்பட்டவர்களில் இருவரை கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மறியலில் ஈடுபட்டோர் களைந்து சென்றனர்.
The post சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.