சிவகார்த்திகேயனின் அடுத்த படங்கள் என்னென்ன என்பது தெரியவந்துள்ளது.
‘மதராஸி’ படத்தினைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதன் 70% படப்பிடிப்பு முடிவுற்றது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதால், இறுதிகட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டான் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தினை தயாரித்து வருகிறது.