சிவகிரி: சிவகிரி அருகே தேவிபட்டணத்தை சேர்ந்த சிங்காரவேலு என்பவரது தோட்டத்தில் உள்ள அறையில் ராஜ நாகம் புகுந்ததாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வாசுதேவநல்லூர் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் மாடசாமி ராஜா தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை லாவகமாக பிடித்து சிவகிரி வனச்சரகர் செங்கோட்டையனிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட ராஜநாகம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோம்பையாற்று வனபகுதிக்குள் விடப்பட்டது. வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் பிடிபட்டது இதுவே முதல் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
The post சிவகிரி அருகே தோட்டத்துக்குள் புகுந்த 12 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது appeared first on Dinakaran.