திமுக-வின் மாநில மாணவரணித் தலைவர் ரா.ராஜீவ்காந்தி. நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளராக இருந்த இவர், சீமானுடன் முரண்பட்டு அக்கட்சியில் இருந்து விலகியவர். பெரியார் எதிர்ப்பு என புது அவதாரம் எடுத்துள்ள சீமான் பற்றி இந்தப் பேட்டியில் விளாசுகிறார் ராஜீவ்காந்தி.
பெரியார் எதிர்ப்பு என்ற சீமானின் புது அவதாரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? – சீமான் ஒரு சர்க்கஸ் கூடாரம் மாதிரி. சீசனுக்குத் தகுந்த மாதிரி எந்த ஊரில் சர்க்கஸ் போடலாம் என்று பார்த்து இடத்தை மாற்றுவார். நாம் தமிழர் கட்சியை அவர் தொடங்கியபோது ஈழத்தில் பேரழிவு. அதனால் மக்கள் கொந்தளித்தனர். பெரியாரின் பெருந் தொண்டர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களும் திமுக-வும் மதிமுக-வும் என எண்ணிலடங்கா தலைவர்கள் ஒருபோதும் ஈழத்தை எதிர்க்கவில்லை.