பெய்ஜிங்: சீனாவின் உள்மங்கோலியா பகுதியில் 10 லட்சம் டன் தோரியம் தாது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அந்த நாட்டின் 60,000 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வடக்குப் பகுதியில் உள்மங்கோலியா அமைந்துள்ளது. இது சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். அங்குள்ள பையுன் ஓபா பகுதியில் அரிய வகை தாதுக்கள் காணப்படுகின்றன. அப்பகுதியில் தற்போது 5 மிகப்பெரிய சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் இருந்து இரும்பு உட்பட 175 வகையான தாதுக்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.