தியான்ஜின்: சீனாவின் தியான்ஜினில் பிரதமர் மோடியுடனான இருதரப்பு சந்திப்பின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங், “இரு நாடுகளும் நண்பர்களாக இருப்பது சரியான தேர்வு" என்று கூறினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனாவின் தியான்ஜின் நகருக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு பின் சீனா சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.