நியூயார்க்: சீனா இன்னொரு முறை எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து இந்தியாவிற்குள் வந்தால் ரஷ்யா இந்தியாவிற்கு உதவுவதற்காக வரும் என்று நினைக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் ஆலோசகர்களின் ஒருவரும், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகருமான தலீப் சிங் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அமெரிக்க அதிபருக்கு தேசிய பாதுகாப்பு ரீதியாகவும், சர்வதேச பொருளாதார ரீதியாகவும் இவர் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இந்தியா வந்த அவர்.. இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கு இடையிலான உறவு பற்றி பேசினார். அதோடு இந்தியாவிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் சில எச்சரிக்கைகளை விடுத்தார். Ads by Ads by எச்சரிக்கை உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ரஷ்யாவின் பல்வேறு வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரஷ்யாவின் நிறுவனங்கள் பொருளாதார தடையை எதிர்கொண்டு உள்ளது. இந்த தடைகளை வடிவமைத்தவர்களில் முக்கியமாக திகழ்ந்தவர் தலீப் சிங்.
ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு உலக நாட்டு தலைவர்களை இவர் சந்தித்து வருகிறார். தலீப் சிங் இந்தியா வந்த தலீப் சிங் வெளியுறவுத்துறை செயலாளர் ஹரிஷ் வர்தன் உடன் சந்திப்பு நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யாவுடன் எந்த நாடும் பொருளாதார ரீதியாக உறவு மேற்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. ரஷ்யாவின் மத்திய வங்கியுடன் உறவு மேற்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. ரஷ்யாவுடன் தற்போது இந்தியா மேற்கொள்ளும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தவறானது கிடையாது. அமெரிக்கா தலீப் சிங் அமெரிக்க விதிகளை அது மீறவில்லை. அதே சமயம் அமெரிக்காவின் நட்பு நாடுகள் அதிகமாக ரஷ்யாவை நம்பி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அனைத்திற்கும் ரஷ்யாவை நம்பவி இருக்கக் கூடாது. டாலரை அடிப்படையாக கொண்ட வர்த்தகத்திற்கு எதிரான வர்த்தகத்தை எங்கள் நட்பு நாடுகள் மேற்கொள்வதை நாங்கள் விரும்ப மாட்டோம்.