சீர்காழி: சீர்காழி அருகே கொட்டியம்பாளையம் கடலில் குளித்தபோது காணாமல் போனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை சிதம்பரத்தை சேர்ந்த மோகன கிருஷ்ணன், ஜெகன்பிரதாப் ஆகியோர் கடல் அலையில் சிக்கினர். கிருஷ்ணனின் உடல் வியாழக்கிழமை கரை ஒதுங்கிய நிலையில் ஜெகன் பிரதாப்பின் உடல் இன்று கரை ஒதுங்கியது. சீர்காழி அருகே பழையாறு மீன்பிடித் துறைமுகம் அருகே ஜெகன் பிரதாப் உடல் இன்று கரை ஒதுங்கியது.
The post சீர்காழி அருகே கடல் அலையில் சிக்கியவரின் உடல் மீட்பு..!! appeared first on Dinakaran.