சீர்காழி: சீர்காழி அருகே கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதால் கருங்கல் கொட்டி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சவுக்கு காடுகள் நிறைந்த இந்த கடலோர பகுதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மடவாமேடு கிராமம் மீனவ கிராமமான இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாகவே கடல் சீற்றம் காரணமாக அரிப்பு ஏற்பட்டு மடவாமேடு கிராமத்தில் கடல் நீர் புகும் அபாயம் உள்ளது. மேலும் கடல் அரிப்பால் சவுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்து அழிந்து வருவதாகவும் மீனவ மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் கடற்கரை ஓரம் முழுவதும் கருங்கற்களை கொட்டி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு விரைந்து தடுப்பு சுவர் அமைக்கும் பட்சத்தில் தங்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
The post சீர்காழி அருகே மடவாமேடு கிராமத்தில் கடல் நீர் ஊருக்குள் புகும் ஆபத்து: கடற்கரையோரம் தடுப்புச் சுவர் அமைக்க மீனவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.