அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ஓபிஎஸ்சுடனான மோதலில் வென்று வந்தாலும் தேர்தலில் அவருக்கு தொடர்ச்சியாக தோல்வி முகம்தான். விரைவிலேயே இரட்டை இலை யாருக்கு என்பதும் உறுதியாகிவிடும். இந்த நிலையில், “கூட்டணி பத்தி நான் பாத்துக்கறேன். நீங்க யாரும் பேசாதீங்க” என்று இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டு, உள்ளூர வேகமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்.
இதனால் 2026-ல் வெற்றிக்கனி நமக்குத்தான் என நம்பிக்கையோடு இருக்கிறார்கள் அதிமுகவினர். அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கண்ணில் தெரிகிறதோ என்னவோ… ஊருக்கு ஊர் அதிமுக மேடைகளில் அடிதடிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். பழனிசாமியை சுற்றி விசுவாசமான தலைவர்கள் இருக்கலாம்.