டோக்கியோ: சுசுகி மோட்டார்ஸின் முன்னாள் தலைவரும், அந்நிறுவனத்தின் உலகளாவிய உந்து சக்தியுமான ஒசாமு சுசுகி காலமானார். அவருக்கு வயது 94. லிம்போமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் டிசம்பர் 25ம் தேதி உயிரிழந்தாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 1930-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி ஜப்பானின் கெய்ரோவில் பிறந்த ஒசாமு மட்சுடா, சுசுகி நிறுவனத்தை உருவாக்கியவர்களின் குடும்பத்துடன் திருமணம் செய்தபின்பு, 1958-ம் ஆண்டு ஆட்டோமேக்கராக அதில் இணைந்தார். பின்பு தனது மனைவியின் குடும்ப பெயரை எடுத்துக்கொண்ட ஒசாமு, அதன்பின்பு சிறிய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சுசுகி ஒரு குடும்ப பெயராக மாறும் வியத்தகு மாற்றத்துக்கான தனது பயணத்தைத் தொடங்கினார்.