ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய நபராகவும் அவரது தனிச் செயலாளராகவும் திறமையாக பணியாற்றியதால் மாநிலம் முழுவதும் அறியப்பட்டவர் தமிழரான வி.கே.பாண்டியன். ஐஏஎஸ் அதிகாரியான இவர், அரசியலில் இணைவதற்காக தனது அரசு பதவியை 2023-ல் ராஜினாமா செய்தார்.
வி.கே.பாண்டியனின் மனைவியான சுஜாதா ராவுத் கார்த்திகேயனும் ஐஏஎஸ் அதிகாரிதான். கணவரின் அடியொற்றி சுஜாதாவும் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவது அரசியல் களத்தில் பேசுபொருளாக ஆகியிருக்கிறது. யார் இந்த சுஜாதா ராவுத் கார்த்திகேயன்?