சென்னை: சென்னை மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினம் நாளை (ஆக.15) கொண்டாடப்படுகிறது. அன்று மது விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.