கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்து வெளியான படம், ‘மேக்ஸ்’. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்தார். விஜய் கார்த்திகேயா இயக்கிய இந்தப் படம் கன்னடம், தமிழ், தெலுங்கில் உருவானது. கன்னடத்தில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் அடுத்த பாகம் விரைவில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி இயக்குநர் விஜய் கார்த்திகேயாவிடம் கேட்டபோது, “இந்தப் படம் கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இன்னும் அங்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் உருவாக, கதையை நம்பிய தயாரிப்பாளர் தாணு சாரும் கிச்சா சுதீப்பும்தான் காரணம். அவர்கள் கொடுத்த நம்பிக்கையில்தான் இந்தப் படம் வெற்றி பெற்றிருக்கிறது. ஹீரோ கிச்சா சுதீப் மீண்டும் சேர்ந்து படம் பண்ணலாம் என்று என்னிடம் கூறியிருக்கிறார். மேலும் சில தயாரிப்பு நிறுவனங்கள் கன்னடத்திலும் தமிழிலும் படம் இயக்க பேசிக்கொண்டிருக்கிறார்கள்.